மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் நினைவு கூறப்படவுள்ளது.

மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க  அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் நினைவு கூறப்படவுள்ளது.

பத்து வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினம் (8) படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்றை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

மட்டக்களப்பு புகையிரத நிலைய  வீதியிலுள்ள இணையம் காரியாலயத்தில்  இன்று பி.ப 3.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்விற்கு அனைத்து ஊடகவியலாளர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் அன்புடன் அழைப்பு விடுக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.