கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

கீரிமடு அருள்மிகு சித்திவிநாயகர் ஆலய ஐயப்ப மண்டல பூஜை

மட்டக்களப்பு கீரிமடு அருள்மிகு சித்திவிநாயகர் ஆலய சபரிமலை தீர்த்த யாத்திரைக்குழுவினரின் மாபெரும் மண்டல பூசை பெருவிழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

கீரிமடு அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயத்தில் உள்ள ஐயப்பர் ஆலயத்தில் இன்று காலை இந்த மண்டல பூஜைகள் நடைபெற்றன.

இதன்போது விசேட யாகம் மற்றும் அபிசேக பூஜைகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இதுவரையில் விரதமாலை அணியாதவர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுகள் இதன்போது நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து ஐயப்பர் பஜனை சிறப்பான முறையில் நடைபெற்றதுடன் அதனைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

இந்த பூஜை வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப:பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஐயப்பர் விரதம் இருந்து மாலை அணி அணிந்த பக்தர்கள் இந்த மண்டல பூஜையினை தொடர்ந்து கேரளாவில் உள்ள ஐயப்பர் ஆலயத்திற்கான பாதாயாத்திரையினை ஆரம்பிப்பதும் குறிப்பிடத்தக்கது.