தேசிய ஒருமைப்பாடு;; அரச கருமமொழிகள் சமூக முன்னேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் முன்னேற்ற நிகழ்சித்திட்டம்




(படுவான்.எஸ்.நவா)

தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக முன்னேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் இளைஞர் யுவதிகளுக்கு சிங்களமொழிப் பாசறை தொடர்ச்சியாக காலை 8 முதல் மாலை 5 மணிவரை பன்னிரெண்டு நாட்கள் நடைபெற்று நேற்று (21)வெள்ளிக்கிழமை போரதீவுப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில் இறுதி;; நிகழ்வில் அமைச்சின் பிரதிநிதியாக தேசியமொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர்; கணேசமூர்த்தி கோபிநாத் மற்றும் பிரதேச செயலகத்தின்  உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் ஆகியோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இளைஞர் யுவதிகளின் கரங்களிலே எமது சமூகத்தின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது அவ்வாறான நீங்கள் முன்மாதிரியானவர்களாக திகழவேண்டும். மொழி ஒரு மனிதனுக்கான சக்தியாக விழங்குகின்றது. 

ஒருவர் எத்தனை மொழியில் தேர்ச்சி உள்ளவராக இருக்கின்றாரோ அவர் அத்தனை மனிதர்களிற்கு சமனானவராக கருத்தப்படுகின்றார். .என நிகழ்வை ஆரம்பித்து வைத்துப் பேசிய கணேசமூர்த்தி கோபிநாத் அவர்கள் தெரிவித்தார் 

அவர் மேலும்பேசுகையில்  கௌரவ அமைச்சர் மனோகணேசன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் தேசிய சகவாழ்வு  கலந்துரையாடல் மற்றும் அரசகருமமொழிகள் அமைச்சின்கீழ் இவ்வாறான மொழிப் பாசறைகள் இளைஞர் யுவதிகளிற்காக நடாத்தப்படுகின்றது.

 அதில் கிழக்குமாகாணத்திற்குரிய பாசறையே இங்கு நடைபெறுகின்றது பன்nரண்டு நாடட்கள் நடபெற்ற இவ்மொழிப் பாசறையின் மூலம் நீங்கள் உங்களின் சிங்களமொழி அறிவினை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும். நாம் ஒருவருடன் உரையாடும் போதே அவருடன் அன்பை பகிர்ந்துகொள்ளமுடியும் ஏன் நாங்கள் என்ன கூறவருக்கின்றோம் என்பதனை தெளிவாக கூறமுடியும் இவ்வாறு ஆரோக்கியமான தொடர்பாடல் ஏற்படும்போது புரிந்துணர்வற்ற தன்மை குறைக்கப்பட்டு இருவருக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்படும். 

எனவே அவ்வாறான புரிந்திணர்வின் மூலமே நல்லிணக்கம் ஏற்படும். இனங்களிற்கிடையில் அவ் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்களை அமைச்சினால் நாடுப்பூராகவும் நடாத்தப்படுகின்றது .உங்கள் காலடியில் கிடைக்கும் இச்சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்துவீர்கள் என நம்புகின்றேன்  எனதெரிவித்தார்.

பாசறையில் கலந்துகொண்டவர்களிற்கான சான்றிதழ்கள் 21.12.2018 அன்று க.கோபிநாத் மற்றும் பிரதேசசெயலக உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன்; வளவாளர்கள் ஆகியோரினால் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது