போரதீவுப்பற்று பிரதேச கலாச்சார இலக்கிய விழா

  (படுவான் நவா)

போரதீவுப்பற்று பிரதேச கலாச்சார இலக்கிய விழா நேற்று(20) வியாழக்கிழமை  கலாச்சார மத்திய நிலையத்தில் பிரதேச கலாச்சார பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமான ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.

இங்கு பிரதேசத்தின் கலை, கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் அருவி வெட்டும் கும்மிநடனம் , வில்லுப்பாட்டு, போன்றன கலைஞர்களினால் ஆற்றுகை செய்யப்பட்டதுடன் பிரதேசத்தின் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பேராசிரியர் செ.யோகராசா அவர்களும் சிறப்பதிதிகளாக த.அருள்ராஜா கோட்டக்கல்வி அதிகாரி பொலிஸ் அதிகாரி பிரதேச திணைக்கள தலைவர்கள் மதகுருமார்கள் அனுசரணையாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வின் போது கலைஞர்களது பண்பாட்டு பவனி தமிழ்தாய் வணக்கம் அதிதிகள் உரை கலைஞர் கௌரவிப்பு பரிசில்கள் வழங்கல் என்பன முக்கிய நிகழ்வுகளாக இடம்பெற்றதுடன் “மருதம்;” “வாழ்வியலும் மரபு மாற்றமும்” ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.