காந்திபூங்காவில் மரப்பட்டைகளினால் உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாநகரசபையினால் மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையினால் நத்தார் புத்தாண்டை முன்னிட்டு வருடாந்தம் மட்டக்களப்பு மாநகரசபையினால் கழிவுப்பொருட்களைக்கொண்டு கிறிஸ்மரம் அமைக்கப்பட்டு ஒளியூட்டப்பட்டு மக்கள் பாவனைக்காக வைக்கப்படுகின்றது.

இதன்கீழ் இந்த ஆண்டு மரத்தின் பட்டைகளைக்கொண்டு சுமார் 30அடி உயிரத்தில் அமைக்கப்பட்ட கிறிஸ்மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல்,மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அழகான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மரத்தினை கண்டுகழிப்பதற்காக பெருமளவான மக்கள் வருகைதந்ததுடன் மதபேதங்களை மறந்து கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.