கிழக்கு மாகாண கலாச்சார போட்டியில் வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு பிரதேச செயலாளர் கெளரவிப்பு.(சசி துறையூர்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாகாண ரீதியிலான கலாச்சாரப் போட்டியில் (2018) பங்குபற்றி
வெற்றிபெற்ற இளைஞர் யுவதிகளை
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திரு .வை.வாசுதேவன் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி .நிருபா பிறின்தன் ஆகியோர் இன்று புதன் கிழமை பாராட்டி  வாழ்த்து தெரிவித்தனர்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு
கறுவாக்கேனி வள்ளுவர் இளைஞர் கழக உறுப்பினர் கயஸ் மிலோசன் ஆண்களுக்கான தனி கிராமிய பாடல் பிரிவிலும் , பெண்களுக்கான கிராமிய பாடலில் கொண்டயங்கேணி ஆர்கலி இளைஞர் கழகத்தைச் சேர்ந்த  P.ரிதுக்சா ஆகியோர்  மாகாண மட்டத்தில் முதலாமிடம் பெற்றனர்.


இர்கள் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழும் வெற்றி கேடயமும் நேற்று 2018.12.18ம் திகதி செவ்வாய் கிழமை அம்பாறை மாவட்ட செயலக  மாநட்டு மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண பரிசளிப்பு நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.