மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை சேர்த்த கலைஞர்களுக்கு மட்டு.மாவட்ட செயலகத்தினால் உயரிய விருது

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கடந்த இரண்டு தினங்களாக 
(22,23/12/2018) மட்டக்களப்பு  மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் நடாத்தப்பட்ட மாவட்ட இலக்கிய விழா 2018 நிகழ்வின்போது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மூத்த கலைஞர்கள்  கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட இலக்கிய விழா 2018 நிகழ்வின்போது பல்வேறுபட்ட கலைஞர்களினால் பாரம்பரிய கலைகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டு உட்பட பாரம்பரிய உணவகம் என்பன காட்சிப்படுத்தப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இரண்டாம் நாள் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றதுடன், மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கலைஞர்கள் இதன்போது அதிதிகளினால் உயரிய கெளரவம் அளிக்கப்பட்டு, விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.