பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்

மட்டக்களப்பு,பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இரத்ததானமுகாம் ஒன்று நடாத்தப்பட்டது.
உதிரம்கொடுத்து உயிரைக்காப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் 11வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினால் நடாத்தப்பட்டது.

கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்தான முகாமில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள்,தாதியர்கள்,கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

வருடாந்தம் கழக தினத்தினை முன்னிட்டு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த இரத்ததான முகாமில் இன்றைய தினம் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இரத்தானம் செய்தனர்.

இரத்ததானம் செய்தவர்களுக்கு இதன்போது பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.