மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் “சாதனையாளர் கௌரவிப்பு.

மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் “சாதனையாளர் கௌரவிப்பு.



மட்/பட்/மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான “சாதனையாளர் கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும்” பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், மாங்காடு கல்வி அபிவிருத்தி நலன்விரும்பிகள் அனுசரணையுடன் 29.11.2018 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 01.00 மணிக்கு பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்புக் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு. க சுந்தரலிங்கம் கலந்துகொண்டதுடன் விசேட அதிதிகளாக ஓய்வுபெற்ற அதிபர் திரு கோ. கருணைநாயகம் மற்றும் கிராமசேவகர் திரு த. ஜனேந்திரன் அவர்களும் மாங்காடு கிராமத்தின் சமூக அமைப்புக்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்வில் கடந்த 2017ஆம் ஆண்டு க.பொ.த
(சா/த) பரீட்சையில் திறமைச் சித்திகளை எய்திய 27 மாணவர்களுக்கும், இவ்வருடம் தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய 2 மாணவர்களுக்கும், சர்வதேச மட்ட குங்கும் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற மாணவர்களுக்கும் வாழ்த்துச் சின்னங்கள், பணப்பரிசில்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கிக் கௌரவித்ததுடன் தரம் 1-5 வரையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் மட்/பட்/மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய ஓய்வுபெற்ற அதிபர் திரு. கோ. கருணைநாயகம் அவர்கட்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌவிக்கப்பட்டதுடன்,  பாடசாலை கல்வி வளர்ச்சிக்கு தொண்டாற்றிக்கொண்டிருக்கின்ற உதவிக் கல்விப்பணிப்பாளர’ திரு. க. சுந்தரலிங்கம் அவர்கட்கும் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.