இம் முறை சாதாரணதர பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆசிவேண்டி விசேட பூசை வழிபாடு

(சசி துறையூர்)

இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதர  பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறை ஆசி  வேண்டி கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான் தோன்றி ஸ்வரர் பேராலயத்தில் விசேட பூசை வழிபாடுகள்.

மாணவர்களுக்கு இறை ஆசிவேண்டி நடைபெறும் பூசை வழிபாடு  எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது என மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியும், மண்முனை தென் மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன செயலாளருமான அமரசிங்கம் தயாசீலன் தெரிவித்தார்.

க.பொ.த.சா தர பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறை அருளாசி வேண்டி எதிர்வரும் 01.12.2018 சனிக்கிழமை   நண்பகல் 12.00 மணிக்கு  இடம்பெறும் பூசை வழிபாடுகளின் போது ஸ்ரீ தான்தோன்றி ஸ்வரனின் பாதங்களில் பூசிக்கப்பட்ட 1000 ம் போனாக்கள் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.