கல்லடி கடற்கரையில் விமர்சையாக ஆரம்பமான கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

கிழக்கு மாகாண ஆளுனர் ரோகிதபொகொல்லாகம சவால்கிண்ண கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சுற்றுலா சபையின் அனுசரணையுடன் இந்த கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது.

இதன் ஆரம்ப நிகழ்வானது கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்கள பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் செயலாளர் கே.கருணாகரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் கலந்துகொண்டார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் உட்பட பிரதேச செயலாளர்கள்,விளையாட்டு திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து எட்டு பெண்கள் அணியும் 31 ஆண்கள் அணியும் கலந்துகொண்டுள்ளன.

இரவு பகலாக நடைபெறவுள்ள இந்த சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டியானது பட்டிப்பளை மற்றும் காத்தான்குடி ஆண்கள் அணிக்கு இடையில் நடைபெற்றதுடன் இதில் 09-21 என்ற புள்ளி அடிப்படையில் பட்டிப்பளை அணி வெற்றிபெற்றது.