போரதீவுப்பற்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வு



 (படுவான்)

போரதீவுப்பற்று பிரதேச செயலகம்  மகளிர் அமைச்சின் சிறுவர் செயலகம் மற்றும் முன்பள்ளி செயற்றிட்ட ஏற்பாட்டில் செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான இறுதிநாள் செயலமர்வு கலாச்சார மத்திய நிலையத்தில் (27)செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்தது
பிரதேச செயலகத்தின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.கமல்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி உதவிப்பிதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் முன்பள்ளிப்பருவ மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரன் முகாமைத்துவ உதவியாளர் றிலா சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சத்திநாயகம் வளவாளர்களான வீ.குகதாசன் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு இணைப்பாளர் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பீ.கமல்ராஜ் எஸ்.நவநீதன் ரீ.மேகராஜ் ஜீ.உமாரமணன் எம்.சர்ஜீன் மற்றும் முன்பள்ளி ஆசிரியரகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இச்செயலமர்வில் முன்பள்ளிப் பிள்ளைகளின்; உடல்சார் நலனும், இயக்கவிருத்தி, சமூகஞ்சார் மனவெழுச்சிவிருத்தி, கற்றல் அனுகுமுறை, சுற்றாடல்சார் விழிப்புணர்வுபற்றி அறிந்திருத்தல், மொழித்திறன்விருத்தி மற்றும் ஆரம்ப எழுத்தறிவு விருத்தி போன்ற விடயங்கள் இச்செயலமர்வில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இதன்போது பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் இப்பயிற்சியானது ஏழு நாள் நிறைவில் பல்வேறுபட்ட அறிவினை பூரணமாக தாங்கள் பெற்றிருப்பீர்கள் என்கின்ற விடயமும் புதிதாக வருகை தரவிருக்கின்ற மாணவச் செல்வகளை கட்டியாளப் போகின்ற பொறுப்பு தங்களிடமுள்ளது.
எனவே தாங்கள் பெற்றுக் கொண்ட அறிவினை எதிர்வருகின்ற 2019ம் ஆண்டு புதிய மாணவர்களை வழிநடத்துவதற்கும், அவர்களை மேலும் மேலும் நல்ல சிறப்பான முறையில் சமூகத்துக்கொரு அடிப்படை கல்வியினை புகட்டுவதற்கு ஏற்றவகையில் அவர்களை வழி நடத்துவதற்கு ஒரு பக்குவ நிலையினை இப்பயிற்சியின் போது பெற்றிருப்பீர்கள் என்பதை நாங்கள் நம்புகின்றோம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஏழுநாள் செயலமர்வின் போது முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றுக்கொண்ட பயிற்சியின் பின்னர் அவர்களினால் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.