சமய மற்றும் கலாச்சார விழாக்களை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் நத்தார் பண்டிகை
தேசிய ஒருமைப்பட்டடிற்கான நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் நடாத்தும் சமய மற்றும் கலாசார விழாக்களை ஒன்றிணைத்து கொண்டாடும் வேலைத்திட்டம். நத்தார் பண்டிகை 2018

இப்பண்டிகையானது மண்முனை மேற்கு வலயத்தில் மட்டக்களப்பு கரடியனாறு மகா வித்தியாலய மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் இன்று மு.ப 10.00 மணியளவில்  கோட்டக் கல்விப் பணிப்பாளர் கோட்டக் கல்வி அலுவலகம் ஏறாவூர் பற்று மேற்கு திரு. எஸ்.முருகேசபிள்ளை தலைமையில் ஆரம்பமானது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கே.ஹரிகரதாஸ் பிரதிக் கல்வி பணிப்பாளர் _அபிவிருத்தி வலயக் கல்வி அலுவலகம் மட்டக்களப்பு மேற்கு மற்றும் கெரவ அதிதிகளாக சிவஸ்ரீ கே. பாலச்சந்திர குருக்கள் ஞானநந்த தேரர் , அருட்தந்தை ஜி. மகிமாதாஸ் மற்றும் எஸ்.எல்.எம். ஷாபான் போன்ற மத குருக்களும்   கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இன் நிகழ்வானது அனைத்து மதங்களும் கலாசார ரீதியாக ஒன்றிணைத்து அனைவருக்குமிடையில் ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தி நாட்டை வலுப்படுத்துகின்ற  விழாவாகும்.