மட்டக்களப்பில் பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய் -காரணம் இதுதான்

தாய்ப்பால் ஊட்டுவது குறைவதன் காரணமாகவே மார்புபுற்றுநோய் அதிகரிப்பதற்கு காரணமாக அமைவதாக குடும்ப திட்டமிடல் சங்க மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் இம்தியாஸ் தெரிவித்தார்.

இலங்கையில் அதிகளவில் பெண்கள் புற்றுநோயினால் பாதிக்கப்படும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தனிநபர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தி உறவுகளை செழிப்படைய செய்யும் வகையில் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான வழிப்புணர்வு நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட குடும்ப திட்டமிடல் சங்கம் மேற்கொண்டுவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள பெண்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

குடும்ப திட்டமிடல் சங்க மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் இம்தியாஸ்,நிகழ்ச்சி உத்தியோகத்தர் எல்சி யோகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

இதன்போது பெண்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வு கருத்துரைகள் வழங்கிவைக்கப்பட்டன.

குறிப்பாக பிள்ளைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்தும் மற்றும் தாய்ப்பாலின் மகத்தும் தாய்ப்பால் ஊட்டுவதினால பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் பெண்கள் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாகவும் இதன்போது குடும்ப திட்டமிடல் சங்க மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் இம்தியாஸ் தெரிவித்தார்.

தாய்ப்பால் ஊட்டாத காரணத்தினாலேயே அதிகளவான பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு உள்ளாவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதில் அதிகளவாக கற்ற பெண்களே பாதிக்கப்படுவதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.