மட்டக்களப்பு லிப்ட் நிறுவனத்தினால் இளைஞர் யுவதிகளுக்கான திறன் மேம்பாட்டுத்திட்டம்


 
(லியோன்)
  

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  லிப்ட் தன்னார்வ தொண்டு நிறுவனமானது மாவட்டத்தில் பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை சமூக பொருளாதார திறன் மேம்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.


இளைஞர் யுவதிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு செயற்பாடாக தெரிவுசெய்யப்பட்ட 40 யுவதிகளுக்கான பால்நிலைக்கல்வி மற்றும் பால்நிலை அடிப்படையிலான சமூக பிறழ்வுகள் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி பட்டறையினை இம்மாதம் 13ம்இ 14ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்ட குடும்ப திட்டமிடலுக்கான நிறுவனத்துடன் இணைந்து நடத்தியுள்ளனர்.

இப்பயிற்சிப் பட்டறையில்  லிப்ட் நிறுவனத்தின் பொது செயலாளர் திருமதி ஜானு முரளிதரன் குடும்ப திட்டமிடலுக்கான நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் திரு   இம்தியாஸ் , இறிடோ  நிறுவனத்தின் பணிப்பாளர் திரு த. மயூரன் மற்றும் அம்கோர் நிறுவன நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் திரு யோ. சிவயோகராஜன் மற்றும் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி மூலம் இளமைக்கால உடலியல் மாற்றங்கள் அதனால் ஏற்படுகின்ற சமூகரீதியான பிரச்சனைகள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான எதிர்கால திட்டமிடல் போன்ற பல விடயங்கள் தொடர்பான பயிற்சிகள் வளவாளர்களினால் வழங்கப்பட்டது.

இது போன்று பல்வேறுபட்ட திறன் மேம்பாட்டு செயற்பாடுகள் எதிர்காலத்தில் லிப்ட்  நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக செயல்படுத்தவுள்ளதாக லிப்ட் நிறுவனத்தின் பொது செயலாளர் திருமதி ஜானு முரளிதரன்  தெரிவித்தார்