சிறந்த 43 கமக்காரர்களுக்கு ஒருநாள் நிகழ்சித்திட்டம்

 (படுவான் எஸ்.நவா)

சமுர்த்தி திட்டத்தின் “வலுவும் சிறப்பும்; கொண்ட சிறந்த  43 கமக்காரர்களுக்கு ஒருநாள் நிகழ்சித்திட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க கேட்போர் கூடத்தில் (13)சமுர்த்தி தலைமையக முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது பிரதேச செயலகத்தின் உதவி பிரதெச செயலாளர் எஸ்.புவனேந்திரன் முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.தியாகராசா வளவாளர்களான த.சசிகுமார் ந.விவேகானந்தராஜா (விவசாய போதனாசிரியர்கள்)  கருத்திட்ட முகாமையாளர் எஸ்.சபாரெத்தினம் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.



இதன்போது கருத்துத்தெரிவித்த உதவிப்பிரதேச செயலாளர் எமது பிரதேசத்தில் அதிகமானவர்கள் விவசாய மேட்டுநிலப் பயிர்செய்கையினை நம்பி வாழ்கின்றவர்கள் இதனடிப்படையில் வீட்டுத்தோட்டம் செய்வதன் மூலம் எங்களுக்கான உணவுத்தேவையினை நிறைவேற்றக் கூடியதாகவும் பொருளாதார ரீதியில் எமது செலவுகளை  மிகுதிபடுத்தக்கூடியதாகவும் இருக்கும்
 இன்று சாப்பிணடுகின்ற உணவில் தொடர்ந்து  நஞ்சு கலந்ததாகவே காணப்படுகின்றது.இதன்காரணமாக நாங்கள் படிப்படியாக தற்பொழுது நஞ்சற்ற உணவுகளை உற்பத்திசெய்கின்ற வேலைத்திட்டங்கள் படிப்படியாக நடைபெற்றுக்கொண்ட வருகின்றது. 
பாரம்பரிய ஆரம்ப காலத்தில் பின்பற்றிய முறைகளிலே சேதனைப்பசளை அதேபோன்று சேதன களைநாசினகைளை பாவிப்பதற்கு நாங்கள் மீண்டும் தயாராகவேண்டிய சூழ்நிலையுள்ளது. 
ஆகவே ஒவ்வொரு குடும்பமும் எங்களுக்கு தேவையான சில உணவு வகையாவது உற்பத்தி செய்துகொள்வோமாக இருந்தால் நஞ்சற்ற முறையிலாவது இருந்து எங்களுடைய ஆரோக்கியம் குழந்தைகளுடைய ஆரோக்கித்திற்கு சிறந்ததாகவிருக்கும்  
எனவே இன்றைய இந்த வளவாளர்களுடைய கருத்தரங்கு மிகவும் பயனுடையதாகவிருக்கும் இவற்றினை நீங்கள் பின்பற்றி செயல்படவேண்டுமென தனதுரையில் குறிப்பிட்டருந்தார்