பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்

 (லியோன்)

அரச  சார்பற்ற நிறுவனங்களின் சிவில் அமைப்புக்களின் வடக்குகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின்  ஏற்பாட்டில்  பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் தொடர்பாக சமூக ஆழ்வாளர்கள் , சிவில் அமைப்புக்கள் , தொண்டு நிறுவங்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் கலந்துரையாடல் ஒன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது 


பயங்கர வாத தடை சட்டங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் , இதில் அமுல்படுத்தப்பட வேண்டிய சட்டநடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .

இதேவேளை தற்போதைய அரசியல் குழப்பநிலை தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது .இதன்போது சிவில் அமைப்புக்களினால் எழுப்பிய கேள்விக்களுக்கு பதில் அளிக்கப்பட்டன

( நாட்டின் பிரதம மந்திரியை மாற்றம் செய்வதற்கு அரசியல் அமைப்பின் 19ஆம் திருத்த சட்டத்தின் 46 ,48 சரத்துக்கு அமைய  தனது சொந்த காரணங்களுக்கும்  மற்றும் இயலாமை காரணமாக  பிரதம மந்திரி தெரிவிக்கும் பட்சத்தில்  ஜனாதிபதியால் பிரதம மந்திரியை பதவி நீக்க முடியும்  ,அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதியின் தனது சொந்த விருப்பிவில் பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்தால்  தற்போதைய 19ஆம் திருத்த சட்டத்திற்கு அமைய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்   

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினராகவும் , அதிக பெரும்பான்மை வாக்குகளை பெற்றவராகவும், இருக்கும் ஒருவரை ஜனாதிபதியால் ஒருவரை பிரதம மந்திரியாக நியமனம் வழங்க அதிகாரம் உண்டு , தற்போதைய  19ஆம் திருத்த சட்டத்திரகு அமைய  ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இல்ல என தெரிவிக்கப்பட்டது .)

அரச  சார்பற்ற நிறுவனங்களின் சிவில் அமைப்புக்களின் வடக்குகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின்  ஏற்பாட்டில்  பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் தொடர்பாக   கலந்துரையாடப்பட்ட நிகழ்வில் இலங்கை மனித உரிமை செயல்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ மற்றும் மட்டக்களப்பு ,அம்பாறை , திருகோணமலை ஆகிய மாவட்டங்களின்  சமூக ஆழ்வாளர்கள் , சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , தொண்டு நிறுவங்களின் பிரதிநிதிகள் ,சட்டத்தரணிகள் என பலர் கலந்துகொண்டனர்