வெள்ளநீரினை கட்டுபடுத்தும் வகையில் வடிகான் தோண்டும் நடவடிக்கை


(லியோன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக  பல தாழ்நில பகுதிகள் வெள்ளநீரினால் மூழ்கியுள்ள நிலையில்  இதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
  

மட்டக்களப்பு மாநகர சபையின்  அனர்த்த முன்னாயத்த குழுவினரால் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்த அபாயத்தை குறைக்கும் வகையில் வெள்ளநீரில் மூழ்கி உள்ள பகுதிகளில்  வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்

இதன்கீழ் மாநகர முதல்வரின் வழிகாட்டலுக்கு அமைய  மட்டக்களப்பு புதூர் , இருதயபுரம் , ஊறணி ஆகிய பகுதிகளில் வடிந்தோடும் வெள்ளநீரினை கட்டுபடுத்தும் வகையில்  வடிகான் தோண்டும் நடவடிக்கையினை இன்று முன்னெடுக்கப்பட்டன

பெக்கோ இயந்திரம் கொண்டு தோண்டப்படும் வடிகான்களை  மாநகர முதல்வர் ,தியாகராஜா சரவணபவன் , மாநகர சபை தொழில் நுட்ப உத்தியோகத்தர் எஸ் .ராஜ்குமார் மாநகர சபையின்  அனர்த்த முன்னாயத்த குழு தலைவரும் 20ஆம் வட்டார உறுப்பினர் டி .சிவானந்தராஜா , 20ஆம் வட்டார உறுப்பினர் அசோக் மற்றும் மாநகர சபையின் அனர்த்த முன்னாயத்த குழு உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்