வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கேதார கௌரி விரதம்

 (படுவான் எஸ்.நவா)
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு இறுதி நாளான இன்று  காப்புக்கட்டும் நிகழ்வு மிகவும் பக்தி பரவசத்துடன் இடம்பெற்றது.ஆலயத்தின் பிரதம குரு சிவத்திரு சி.சாம்பசிவம் உதவிக்குரு மா.அருள்நாயகம் அவர்களின் ஆசிர்வாதத்துடன் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.  
இதன் போது என்றும் இல்லாத அளவுக்கு இவ்வருடம் அதிகமான பக்தடியார்கள்  கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.