சீரற்றகாலநிலை காரணமாக படுவான்கரை போக்குவரத்து பாதிப்பு

 (படுவான்.எஸ்.நவா)
சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருவது மட்டுமின்றி வெள்ளநீர் வழிந்தோடும் நிலையும் காணப்படுகின்றது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும்மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக படுவான்கரைக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதை காணமுடிவதுடன் மக்கள் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியிலே போக்கவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றனர். 
களுவாஞ்சிகுடியிலிருந்து வெல்லாவெளிக்கு செல்லும் பிரதான வீதி பழுகாமம் மண்டுர் மற்றும் காக்காச்சிவட்டை பிரதான வீதி என்பன வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்தை மேற்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலமையில் நேற்று மாலை மட்டக்களப்பு முகத்து வாரத்தில் ஆற்றுவாய் வெட்டப்பட்டுள்ளதனால் வெள்ளநீர் கடலுக்குள் செல்கின்றது.இதனால் வெள்ளம் படிப்படியாக குறைந்து வருவதை காணமுடிகின்றது. 




 இந்நிலையில் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் பெரியபோரதீவு கோயில்போரதீவுமேற்கு கோயில்போரதீவு போன்ற கிராமங்கள் வெள்ள நீர் நிரம்பிக்காணப்படுவதால் இக்கிராமங்களிலுள்ள 250 குடும்பங்களை சேர்ந்த 755 நபர்கள் பொது இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர் 



 இவர்களுக்கான சமைத்த உணவுகளை உடனடியாக பிரதேச செயலாளரின் வேண்டுதலுக்கு அமைவாக  கிராமசேவக உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அக்கிராமத்தின் சங்கங்கள் அமைப்புக்கள் இணைந்து வழங்கிக்கொண்டு வருவதைக்காணக்கூடியதாகவுள்ளது.