பாடசாலை மாணவர்களது சீருடை மற்றும் சிகை அலங்காரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

 (படுவான்.எஸ்.நவா)

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிகை அலங்கார உரிமையாளர்கள் ஆடை அலங்கார உரிமையாளர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு பிரதேசத்தின் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (13)நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வின்போது கருத்துத்தெரிவித்த பிரதேச செயலாளர் போரதீவுப்பற்று கோட்டைகல்வி அதிகாரி போன்றோர்கள் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திலுள்ள பட்டிருப்பு வலயத்தில் 69 பாடசாலைகளில் இதே போன்ற நிகழ்வு இடம்பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றியளித்துள்ளது.
எனவே எதிர்வருகின்ற 2019ம் ஆண்டில் இப்பிரதேசத்தில்  நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சிகை அலங்கார உரிமையாளர்கள் ஆடை அலங்கார உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும்
குறிப்பாக பிரதேச சபைக்கு  முழுமையான ஒரு கடப்பாடுள்ளது இவர்களுக்கான அனுமதியினை பிரதேச சபை வழங்க வேண்டுமெனவும்;  மாணவர்களுக்கு இரண்டு வகையான கடமைகள் உள்ளது. ஒன்று சீருடை சம்மந்தமான நெறிப்படுத்தல் இரண்டாவது முடிவெட்டுதல் தொடர்பான நெறிப்படுத்தல் குறிப்பாக ஆண் மாணவர்கள் தரம் 09 தொடக்கம் 13 வரை உள்ள மாணவர்கள் மிகவும் நேர்த்தியாகவும் காற்சட்டை சேட் எப்படி எவ்வாறு படத்தில் உள்ளவாறு கடைப்பிடிக்கவேண்டுமெனவும்  பெண் மாணவர்கள் சீருடைகள் களுத்துப் பட்டி போன்றவை எவ்வாறு அணிய செயல்படவேண்டுமெனவும்  தனதுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதன்போது பிரதேச செயலாளர் ஆர் ராகுலநாயகி உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் கோட்டைக்கல்வி அதிகாரி ரீ.அருள்ராசா சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்  மற்றும் சிகையலங்கார உரிமையாளர்கள் ஆடை அலங்கார உரிமையாளர்கள் என்பன ஏராளமானோர் கலந்துகொண்டனர்.