சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் நிகழ்வு

உலக மக்களையே திரும்பிபார்க்கவைத்த சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு விழா மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்றது.

மத நல்லிணக்கம்,மத ஒற்றுமை என்பவை தொடர்பில் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை மதங்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்துபவையாக அமைந்தன.

இந்த உரையினை வருடாந்தம் நினைவூட்டப்பட்டு மத நல்லிணக்கத்தை ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளை இராமகிருஸ்ணமிசன் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது.

இதன்கீழ் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு விழா நேற்று மாலை மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் மட்டக்களப்பு,கல்லடி இராமகிருஸ்ணமிசன் பொதுச்செயலாளர் சுவாமி தக்ஷானந்தஜி மகராஜ் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் எஸ்.விவேகாந்தராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதன்போது கிறிஸ்தவ ஒன்றியம்,பல்சமய ஒன்றிய உரையாடல் மறைமாவட்ட இயக்குனர் அருட்தந்தை ஜே.நிகஸ்ரின் அவர்களினால் சிறப்பு சொற்பொழிவு நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகளும் சிறப்புசொற்பொழிவுகளுடை நடைபெற்றதுடன் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின் விசேடமாக சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை 3டி வடிவில் உருவாக்கப்பட்ட வீடியோ பதிவும் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.