வனரோபா தேசிய நிகழ்சிதிட்டத்தில் ஒருலெட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு



(எஸ்.நவா)

போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள  றாணமடு மாலையர்கட்டு சின்னவத்தை பாலையடிவட்டை கண்ணபுரம் செல்வாபுரம் போன்ற பிரிவுகளில் ஒருலெட்சம் பனை விதைகள் நடும் வேலைத்திட்டம் (24) புதன்கிழமை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அவர்களின் எண்ணக்கருவில் தோன்றிய இவ்வேலைத்திட்டத்தினை அக்ரா நிறுவனத்துடன் இணைந்து ஒருலெட்சம் பனை விதைகளை சேகரிக்கப்பட்டு எல்லைப்புறங்களான இப்பிரதேசங்கில் நடுவதன் மூலம் யானைகள் வருவதை தடுக்கமுடியும் என்பதற்காக இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்
இந்நிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்கள் ஓக்டோபர் மாதம் 01ஆம்திகதி முதல் 31ஆம் திகதி வரை இலங்கையிலே தேசிய மரநடுகை மாதமாக வனரோபா என்ற பெயரிலே எங்களுடைய அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய சிந்தனையிலே இது செற்படுத்தப்படுகிறது என அறிவீர்கள். அதனை மகாவலி நீர்ப்பாசன அமைச்சினூடாக இந்த ஏற்பாடுகள் செய்;யப்;பட்டுக் கொண்டு வருகின்றது. அதனுடைய நோக்கம்; இலங்கையிலே ஆரம்ப காலங்களில் எங்களுடைய புவியின் மேற்பரப்பில் 80சதவீதமானவை காடுகளாக தற்போது அதனுடைய தொகை 29.4 சதவீதமாக குறைந்திருக்கின்றது அதனை மனிதர்களும் இயற்கையும் அளித்திருக்கின்றார்கள் சில வேளைகளில் இயற்கையும் அதற்குகாரணமாக அமைந்திருக்கலாம் அந்த  பயன்பாடு சம்மந்தமாக நாங்கள் எல்லோராலையும் அறிவோம் அந்த காட்டினுடைய அளவினை 32சதவீதமாகஅதிகரிக்கவேண்டுமென அதிஉத்தம ஜனாதிபதி அவர்கள் இலங்கை பூராகவும் மரங்களை நட்டு அவற்றினூடாக மரங்களுடைய எண்ணிக்கையையின் காடுகளின் அளவினை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாக தற்போது இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நிகழ்த்திருக்கிறார்கள்.
காட்டினுடைய சராசரி 29.4 வீதமாக இருந்தாலும் மட்டக்களப்பைப் பொறுத்த வரையில் 11சதவீதமான அளவுதான் எங்களுடைய காடுகள் எங்களுடைய பிரிவுகளில் காணப்படுகின்றன இதனுடைய தேவையினை உணர்ந்து இவ்வாறான ஏற்பாட்டினை செய்தமைக்காக பிரதேச செயலாளர் அக்ரா நிறுவனம் அதனுடைய ஆலோசகர் அவர்களுக்கும் பாராட்டுக்ககையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எங்களுடைய  மூதாதைகள் எவ்வாறு எங்களுக்கு இயற்கையை கையளித்தார்களோ அதைவிட சிறப்பாக எதிர்கால சந்ததிகளுக்கு அந்த இயற்கையை நாங்கள் கையளிக்கதேவையுள்ளது என தனதுரையில் குறிப்பிட்டிருந்தது சிறப்பம்சமாகும்
இந் நிகழ்வின் போது பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களும் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் உதவித்திட்டமிடப்பணிப்பாளர் எஸ்.சசிகுமார் கணக்காளர் நாகேஸ்வரன் பனை அபிவிருத்திச்சபை மாவட்ட முகாமையாளர் த.விஜியன் அட்ரா திட்டமுகாமையாளர் என்.சுரேஸ்குமார் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் நா.சுரேஸ்குமார் மத்திய நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் பத்மதாசன் கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் சாரணிய மாணவர்கள் பாடசாலை மாணவர்கள்  கமநல அமைப்புக்கள் சங்கங்ள்; கழகங்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.