30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இன்று ஆரம்பம்.



(சசி துறையூர்)
தேசிய இளைஞர் விழையாட்டு விழா 2018
இன்று பி.ப 04.00 மணிக்கு மாத்தறை வெலிகம கொடவில விளையாட்டு திடலில் கோலாகலமான முறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இளைஞர் விவகார, திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர் சேவை மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தும் விளையாட்டு விழா 25.10.2018 ம் திகதி தொடக்கம் 28.10.2018 வரை நடைபெறவுள்ளது என மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவரும் இலங்கை இளைஞர் கழக சம்மேளன ஊடகபிரிவின் செயலாளருமான செல்வன் ரி.விமலராஷ் எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.

விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்விற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இளைஞர் விவகார, திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக, இளைஞர் விவகார, திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி
அமைச்சின் இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே, அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எறந்த வெலியங்கே ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் 3000க்கு மேற்பட்ட வீர வீரங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பங்குபற்ற தகுதிபெற்ற வீரவீராங்கனைகள் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்ததாகவும், இம்முறை மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் கபடி அணி சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும்   தேசிய சம்மேளன ஊடகபிரிவின் செயலாளர் ரி.விமலராஸ் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு இம்முறை தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் விசேட திறமைகளை வெளிப்படுத்தும் வீர வீராங்கனைகளுக்கு எதிர்காலத்தை வளப்படுத்துவதற்க்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.