விளாவட்டவானில் மாதிரி கிராம அடிக்கல் நடு வைபவம்.
(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் மாதிரி கிராமத்திற்கான அடிக்கல் நடு வைபவம் இன்று (05.09.2018) மு.ப 11.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த மாதிரி கிராமத்தில் பதினெட்டு வீடுகள் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அடிக்கல் நடு வைபவத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட மாதிரி கிராமங்களின் பயனாளிகளுக்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்த அடிக்கல் நடு வைபகத்திற்கு
மண்முனை மேற்கு பிரதேச சபையின் உதவி தவிசாளர் பொ.செல்லத்துரை,
மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மலராஜ்,
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தர்கள்,
ஐ.தே.க மட்டக்களப்பு மாவட்ட இனைப்பாளர்,
விளாவட்டவான் கிராமசேவை உத்தியோகஸ்தர்,
விளாவட்டவான் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்,
ஆலய பிரதம குருக்கள்,
மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள்.
சமுகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் .
ஆகியோர் அதிதிகளாக வருகை தந்திருந்தனர்.