புதுக்குடியிருப்பில் மிகச்சிறப்பாக நடைபெற்ற பௌர்ணமி கலை விழா .





மண்முனைப்பற்று பிரதேச செயலகம் ,மண்முனைப்பற்று பிரதேச கலாசாரப்பேரவை,மண்முனைப்பற்றுப்பிதேச கலாசார அதிகாரசபை ஆகியவற்றின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபை நடத்தும் பௌர்ணமி கலை விழா 03/09/2018 திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு மட் /புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் ஆலய பரிபாலனசபைத் தலைவர் திரு .அ.குலேந்திரராசா (சமாதான நீதவான்) அவர்களின் தலைமையில் நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்விற்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்கள் பிரதமஅதிதியாகவும்,கண்ணகி கலை இலக்கியக் கூடலின் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் ,மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி,கண்ணகி மகா வித்தியாலய அதிபர் திரு வே.தட்சணாமூர்த்தி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றவுள்ளனர்.

புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் நடன நாட்டிநிகழ்வுகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

விசேட நிகழ்வாக கதிரவன் பட்டிமன்றக்குழுவின் நகைச்சுவைப்பட்டிமன்றம் கதிரவன் த .இன்பராசா தலைமையில் பேச்சாளர்களாக கவிஞர் அ.அன்பழகன் குரூஸ் ,கவிஞர் ஜீ.எழில்வண்ணன்,கவிஞர் அழகு தனு ,திருமதி நிலோஜினி குணசீலன்
 புதுவையூர் பு.தியாகதாஸ் ,பாலமீன்மடு இரா கலைவேந்தன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.