புதூர் விக்னேஷ்வரா வித்தியாலய பரிசளிப்பும் “புத்தொளி”சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும்


(லியோன்)


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு
, புதூர் விக்னேஷ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த  பரிசளிப்பு விழாவும், “புத்தொளிசஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் பாடசாலை  அதிபர் கே பாஸ்கரன் தலைமையில்  பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்று பிற்பகல்  நடைபெற்றது

      
பரிசளிப்பு  நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை பாடசாலை மாணவர்களினால் பேன்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு பிரதான மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்
இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன்    பாடசாலையின் ஆண்டு அறிக்கையினை அதிபரினால் வாசிக்கப்பட்டது

நடைபெற்ற பாடசாலை பரிசளிப்பு மற்றும் புத்தொளிசஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் மாணவர்களின்  கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ,பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளில்  சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது

இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் , மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் , மாநகரசபை உறுப்பினர்களான இரா.அசோக், , சிவானந்தராஜா,  வலயக் கல்விப்பணிப்பாளர் கே பாஸ்கரன் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .அருள்பிரகாசம் ஆகியோர்  கலந்துகொண்டனர்

கலாசார நிகழ்வுகளுடன் ஆரம்பமான நிகழ்வில் கடந்த ஆண்டில் பல  சாதனைகலை நிலைநாட்டிய பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் ,பாடசாலையின் வரலாற்றையும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆக்கங்களை தாங்கிய புத்தொளிசஞ்சிகையும் அதிதிகளினால் வெளியீட்டு வைக்கப்பட்டது .

நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்  பாடசாலை  அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்