உள்ளக விளையாட்டு அரங்கு திறந்து வைக்கப்பட்டது


 (லியோன்)

விளையாட்டு அமைச்சின் 93  மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ்  மட்டக்களப்பு வெபர் மைதான வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டு அரங்கு மட்டக்களப்பு மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டு   (6) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது .


திறந்து வைக்கப்பட்ட உள்ளக விளையாட்டு அரங்கில்  வைபவ ரீதியாக உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் ,மட்டக்களப்பு பூப்பந்தாட்ட சங்கமும் இணைந்து நடாத்தும் பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் , மாநகர பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் ,மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , வலயக்கல்வி அலுவலக உடல்கல்வி ஆசிரியர் ஆலோசகர் கே .ரவீந்திரன்  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சசிநந்தன், மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் , மாநகர சபை உறுப்பினர்கள் , ஊழியர்கள் ,பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்