மட்டக்களப்பு மாநகரசபைக்கு சிற்றூழியர்கள் நியமனம்.(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு மாநகரசபையில் இதுவரை
காணப்பட்ட சிற்றூழியர்களுக்கான 30 நியமனங்கள் நேற்று (06.09.2018) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனால் வழங்கி வைக்கப்பட்டன. மாநகரசபையில் தொழில் வேண்டி விண்ணப்பித்த 450 இற்கும் அதிகமான விண்ணப்பதாரர்களிடையே நடைபெற்ற நேர்முகத் தேர்வுகளின் அடைப்படையில் முதற்கட்டமாக 30 பேருக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாநகரசபையின் குழு அறையில் இடம்பெற்ற இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர செயலாளர் சியாஹல் ஹக், நிர்வாக உத்தியோகத்தர் ரோகினி விக்ணேஸ்வரன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநகரின் துரித அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கும், பசுமைச் சுத்தமான நகரமாக கட்டியெழுப்புவதற்குமாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நீங்கள் அனைவரும் மாநகரின் மீது பற்று வைத்து அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் முதல்வர்இவ்  நியமனம் பெற்ற ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.