தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்

(லியோன்)

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  - சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு  ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின்  பணிப்புரைக்கு அமைவாக தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு  நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்னறன


இதற்கு அமைவாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் ,பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் .
மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட  மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்  செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ . ஸ்ரீநாத் தலைமையில்  வித்தியாலய அதிபர் கே . ஸ்ரீதரன் மற்றும் பிரதி அதிபர் எம் .பகிரதன்  ஒழுங்கமைப்பில்  பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் மயிலம்பாவெளி பொது சுகாதார பிரிவு பரிசோதகர்கள் , ஏறாவூர் பொலிஸ் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஊர்வலமும் , வீதி நாடகமும் , விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகமும் இடம்பெற்றன

இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் , பொது சுகாதார பரிசோதகர்கள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .