பிரதான வெள்ள வாய்க்கால்களை துப்பரவு செய்யும் நடவடிக்கை


(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்த அபாயங்களை
 குறைக்கு வகையில் பல வேலைத்திட்டங்கள் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன


இதன்கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் பிரதான வெள்ள வாய்க்கால்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட  கருவப்பங்கேணி , ஜ்யந்திபுரம் , நாவலடி , விஜெயபுரம் ,சின்ன ஊறணி  ஆகிய கிராம சேவை பிரிவுகளூடாக செல்லும் பிரதான  வெள்ள வாய்க்கால்களை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன

இந்த வாய்க்கால்களை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மாநகர சபை உறுப்பினர்கள் . சுகாதார பரிசோதகர் .மாநகர சபை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்