உள்ளாச விடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கான பயிற்சிகள்


(லியோன்)

உள்ளாசவிடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கான பயிற்றுவிப்பாளர்களுக்கான ஐந்து நாள்  பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பில்  நடைபெற்றது


.மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  அவுஸ்ரேலியா  அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் கீழ்  திறன் அபிவிருத்தி அமைச்சின் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட   உள்ளாசவிடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கான பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு   இன்று  மட்டக்களப்பில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட உள்ளாசத்துறையினை சர்வதேச  தரத்தில் உயர்த்தும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட  உள்ளாசவிடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கான பயிற்சிகள்   வழங்கப்பட்டு சர்வதேச தரத்தில் அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன

இதற்கான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பில் தனியார் விடுதி ஒன்றில்  இன்று நடைபெற்றது  இந்நிகழ்வு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி கே. குகதாஸ்  தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையில் வளவாளர்களாக  மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன உறுப்பினர்களான என் .நிரோசன் , வி .மனோகரன் ,மட்டக்களப்பு மாவட்ட உள்ளாசவிடுதிகளின்  உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் கலந்துகொண்டனர்