அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது

 (லியோன்)

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழமை  வாய்ந்த ஆலயமான  மட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தின்    210  வது ஆலய வருடாந்த திருவிழா  கடந்த 14 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை மாலை பங்கு தந்தை அருட்பணி  ரெட்னகுமார் அடிகளார்   தலைமையில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி (23) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  திருவிழா திருப்பலியுடன் ஆலய திருவிழா நிறைவு பெற்றது 


திருவிழா திருப்பலியினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை  தலைமையில் பங்கு தந்தை அருட்பணி  ரெட்னகுமார் அடிகளார் அருட்பணி லோரன்ஸ் அடிகளார் ஆகியோர்  இணைந்து ஒப்புகொடுத்தனர் .

திருநாள்  திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் நடைபெற்ற அன்னையின் திருச்சுருப ஆசிர்வாதத்துடன் ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது .

கொடியிறக்கத்தை தொடர்ந்து அன்னையின் திருச்சுருவ பவணி அமிர்தகழி வாவியில் இடம்பெற்றதுடன் திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து வருகை தந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்