காணி பிணக்குகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவு படுத்தும் செயலமர்வு


 (லியோன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம சேவை பிரிவில் உள்ள கிராம மக்களுக்கான காணி பிணக்குகள் தொடர்பாக  செயலமர்வு இன்று நடைபெற்றது


நடைபெற்ற செயலமர்வில் காணி மத்தியஸ்த சபை எவ்வாறு  காணி பிணக்குகளை கையாளுகின்றது ,காணி பிணக்கு ஒன்றிப்பின் மக்கள் முகம்கொடுக்கின்ற பிணக்கு பற்றிய விபரங்கள் ,இலகுவாக சிநேகப்பூர்வமாக தீர்வுகாணல் , குறைந்த செலவில் குறுகிய காலத்தில் தீர்வினை பெறுதல் ,போன்ற விடயங்கள் தொடர்பான தெளிவு படுத்தல் நிகழ்வாக நடைபெற்றது


ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த செயலமர்வில் வளவாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபை தவிசாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் , மட்டக்களப்பு மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபை மத்தியஸ்தர் எஸ் பஸ்தியாம் பிள்ளை மற்றும்   கிராம மக்கள்  கலந்துகொண்டனர்