டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் “அம்கோர்” நிறுவனம்


(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில்
அம்கோர்தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.



அம்கோர்தன்னார்வத் தொண்டு நிறுவனமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தினை பாரியளவில் அமுல்படுத்தி வருகின்றது.


மாவட்ட ரீதியாக 14 பிரதேச செயலளார் பிரிவிலும் 346 கிராம சேவையாளர் பிரிவிலும் ஒரே காலப்பகுதியில் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.


இந்த திட்டத்தினூடாக மாவட்டத்திலுள்ள பாவணையற்ற மற்றும் பாவணை குறைந்த 40000 வீட்டுக் கிணறுகளை வலைமூடி கொண்டு மூடுதலும் நுளம்புக் குடம்பிகளை உண்ணும் மீன்களை அனைத்துக் கிணறுகளுக்கு இடுதலும் பிரதானமாக செயற்படுத்தப்படுகின்றது.


தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு கிணற்றுக்கான வலைமூடி வழங்கும் முதலாவது நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலளார் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர்  கிராம சேவையாளர் பிரிவுகளில்  இன்று வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில்  ஏறாவூர் நகர் உதவி பிரதேச செயலளார் திருமதி ரமீ|~h ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தாறிக் கிராமசேவை உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோத்தர்கள் அம்கோர் உத்தியோத்தர்கள் கலந்து கொண்டனர். இன்றைய தினம் 420 பயனாளிகளுக்கு வலை மூடிகள் வழங்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் மற்றுமொரு பிரதான செயற்பாடாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராம சேவையாளர் பிரிவிகளிலும் 10 தொண்டர்களை கொண்ட கிராமிய டெங்கு விழிப்புணர்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.


இதனூடாக மாவட்டத்தில் அண்ணளவாக 3460 தொண்டர்கள் உருவாக்கப்பட்டு கிராம மட்ட டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் மேம்படுத்தப்படுகின்றது, இவை தவிர மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிரசுரங்களும் வெளியிடப்படுகின்றது.


மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவகத்திற்கு புகை தெளிகருவிகள் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்குவதனூடாக மாவட்டத்தில் n;டங்கு நோயின் தாக்கத்தினை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் இத்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்றது,


;ந்த திட்டமானது இந்த வருடம் வைகாசி மாதம் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருடம் ஜப்பசி மாதம் வரையான 18 மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படும் அத்துடன் இதுபோன்றதொரு 5 மாதகால திட்டமானது கடந்த வருடமும் அமுல்படுத்தப்பட்டதென்பதும்; குறிப்பிடத்தக்க விடயமாகும்.