வாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை மாணவர்களின் மாதிரிச் சந்தை


 (லியோன்)

மட்டக்களப்பு வாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை  மாணவர்களின்  மாதிரிச் சந்தை
2018  வை எம் சி எ வாழ்வோசை பாடசாலையில் நடைபெற்றது
.

மாணவர்களின் திறன் அபிவிருத்தி செயல்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கில் பாடசாலை ஆசியர்களின் பங்களிப்புடன் வருடாந்தம் நடாத்தப்படும்  மாதிரிச் சந்தையின் 2018 ஆம் ஆண்டுக்கான சந்தை 306 c2 கீழ் உள்ள மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம் .ஜெ .எம் எப்  மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது .

வாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை மாணவர்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக  மாணவர்களின்  மாதிரிச் சந்தை நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய சாதாரண பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்

நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு விமானப்படை அதிகாரிகள் , 306 c2 புதிய நூற்றாண்டு எம் .ஜெ .எம் எப்  லயன்ஸ் கழக உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்