சஷ்டயன் விளையாட்டு கழகம் கோல்டன் ஈகள் சவால் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது


(லியோன்)

மட்டக்களப்பு இருதயபுரம் கோல்டன் ஈகள்  விளையாட்டு கழகத்தின் 30 வது வருட கோல்டன் ஈகள் மற்றும் புவிராஜ் சவால் கிண்ணத்தை மட்டக்களப்பு நகர் சஷ்டயன்  விளையாட்டு கழகம் சுவிகரித்துக்கொண்டது


மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் பிரதான   32 விளையாட்டு கழகங்களுக்கிடையிலான  10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி மட்டக்களப்பு கருவப்பங்கேணி  விபுலானந்த கல்லூரி மைதானத்தில்  நடைபெற்றது  .

மட்டக்களப்பு  இருதயபுரம் கோல்டன் ஈகள்  விளையாட்டு கழக ஏற்பாட்டில் கழகத்தின் 30 வது  வருட நிறைவினையும்  காலம் சென்ற கழக வீரர்  புவிராஜின் வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில்  மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில்  பதிவு செய்யப்பட 32   விளையாட்டு கழகங்களுக்கிடையிலான 10 ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிகெட் சுற்று போட்டிகள்  நடத்தப்பட்டது .    

மட்டுப்படுத்தப்பட்ட  10 ஓவர்கள் கொண்ட  மென்பந்து கிரிகெட் சுற்று போட்டியின் இறுதி போட்டி  மட்டக்களப்பு கருவப்பங்கேணி  விபுலானந்த கல்லூரி மைதானத்தில்  நடைபெற்றது  .

நடைபெற்ற  மென்பந்து கிரிகெட் சுற்று போட்டியில்  கலந்துகொண்ட  32 விளையாட்டு  கழகங்களில் இறுதி சுற்றுக்கு மட்டக்களப்பு  இருதயபுரம் சென்ட் என்டனிஸ் விளையாட்டு கழகமும் மட்டக்களப்பு நகர் சஷ்டயன் விளையாட்டு கழகமும் தெரிவானது . 

இரு கழகங்களுக்கிடையில் நடைபெற்ற இறுதி  போட்டியில் மட்டக்களப்பு  இருதயபுரம் சென்ட் என்டனிஸ் விளையாட்டு கழகம் 10 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 37  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .
இதற்கு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு நகர் சஷ்டயன் விளையாட்டு கழகம் 4 விக்கெட்டுக்களை  இழந்து 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

இதன் அடிப்படையில் ஒரு  ஓட்டங்களால் மட்டக்களப்பு  மட்டக்களப்பு நகர் சஷ்டயன்  விளையாட்டு கழகம் வெற்றிபெற்று மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட மென்பந்து கிரிகெட் சுற்று போட்டியில் ஜெம்பியனாக  தெரிவு செய்யப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு  இருதயபுரம் கோல்டன் ஈகள் மற்றும் புவிராஜ் சவால் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் ,சிறப்பு அதிதியாக மாநகர முதல்வர்  தியாகராஜா சரவணபவன் , அழைப்பு அதிதிகளாக கருவப்பங்கேணி  விபுலானந்த கல்லூரி அதிபர்  மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள்    கலந்துகொண்டனர்.