சொந்த மண்ணில் வாகை சூடியது குறுந்தையூர் ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம்.(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் கிராமத்தில் உயிர்நீர்த்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் அணிக்கு 09 பேர் கொன்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை 01,02 ஆகிய திகதிகளில் நடாத்தியிருந்தார்கள்.

இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு 32 ஆணிகள் பங்குபற்றியிருந்தனர்
பலத்த போட்டிகளுக்கு பின்பு சொத்த மண்ணில் வாகை சூடியது ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம்.

01ம் இடம் : குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம்.
02ம் இடம் : மகிழடித்தீவு மகிழைஇளைஞர் விளையாட்டுக் கழகம்.
03ம் இடம் : விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம்.
04ம் இடம் : முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகம்.
ஆகிய கழகங்கள் வாகை சூடியது.
சிறந்த விரராக ரென்ஸ்டார் முன்னனி வீரரும்
சிறந்த பந்துக்காப்பாளராக மகிழை இளைஞர் பந்துக்காப்பாளரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இறுதிப் போட்டியில் மண்முனை மேற்கு பிரதேசத்திலிருந்து குறுந்தயடி முன்மாரி ரென்ஸ்டார் அணியும்
மண்முனை தென்மேற்கு பிரதேசத்திலிருந்து மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணியும் மோதிக்கொன்டனர்
02:01 என்ற கோள் கணக்கில். ரென்ஸ்டார் அணி வெற்றி பெற்று இந்த ஆண்டிற்கான மகுடத்தினை சூடிக்கொன்டது.