தேற்றாத்தீவு அறிவொளி முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பும்

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவொளி முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பும் முன்பள்ளியின் தலைவர் .விலானந்தராஜாதலைமையில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய முன்றலில் 22.09.2018 சனிக்கிழமை பிற்பகல்   இடம் பெற்றது .


இவ்  முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பும்            விழாவிற்கு    ஆத்மீக அதிதிகளாக தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார்  ஆலய பிரதம சிவாச்சாரியார் மோஹனநந்த குருக்கள் மற்றும்  தேற்றாத்தீவு புனித யூதா ததேயு திருத்தல பங்குதந்தை அருட்தந்தை நிர்மல் சூசைராஜ்யும்  பிரதம அதிதியாக  .சசிகரன் செயலாற்றுப் பணிப்பாளர்,முன்பள்ளி பணியகம், மட்டக்களப்பு விசேட அதிதியாக  மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் கலந்து கொண்டார்.
இவ் விழாவின் முதல் நிகழ்வாக அதிதிகளை மலர் மாலை அணிவித்து வரவேற்பு இடம் பெற்றது.அதனை தொடர்ந்து மங்கல விளக்கேற்றலும் ,இறைவணக்கமும் இடம் பெற்றது.
முன்பள்ளியின் தலைவர் தலைமையுரையை தொடர்ந்து மழலைகளின் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகியது அந்த வகையில்கோலாட்டம்,காவடியாட்டம்,ஒயிலாட்டம்,முயல் நடனம்,குருவி நடனம் போன்ற பலதரப்பட்ட நிகழ்வுகள் இடம் பெற்றதை தொடரந்து முன்பள்ளிமாணவர்களுக்கு பரிசில் வழங்கப்படன. அத்துடன் இவ் முன்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பெற்றோரினால் பரிசு பொதி வளங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்படதக்க விடயம்.