செங்கலடியில் விபத்து -இருவர் படுகாயம்

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் செங்கலடி நகரில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிள் ஒன்றை வேகமாக இன்னுமொரு மோட்டார் சைக்கிள் முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது படுகாயமடைந்த இருவரும் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவ இடத்திற்கு வந்த ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.