நாவற்காட்டில் கதிரவன் பட்டிமன்றத்தின் 43 ஆவது சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது -11/09/2018(விளாவூர் நிருபர்)

மட் -நாவற்காடு அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சபத்தில் மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றத்தின் 43 ஆவது சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது பழங்கால வாழ்க்கை முறைகளையும் தற்போதைய கால வாழ்க்கை முறைகளையும் மிகவும் நகைச்சுவையாகவும் சிந்திக்ககூடிய விதத்திலும் நிகழ்ந்த இப்
பட்டிமன்றத்தில் பல பாரம்பரியமான  வாழ்க்கை சம்பவங்களை
மற்றும்  நாகரீக வாழ்க்கையின் சிக்கல்களை சிறப்பாக எடுத்துக்காட்டினர்.
ஆலயபரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் பட்டிமன்றத்திற்கு கதிரவன் த.இன்பராசா (ச.நீ) தலைமைவகிக்க சோலையூரான் ஆ.தனுஸ்கரன்,கவிஞர் ஜீ.எழில்வண்ணன்,புதுவையூர் பு.தியாகதாஸ்,கவிஞர் அழகு தனு,திருமதி நிலோஜினி குணசீலன்,செல்வி தர்ஷினி நடராசா ஆகியோர் பங்குபற்றினர்

நிகழ்வின் இறுதியில் பட்டிமன்ற பேச்சாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பெற்றனர்.