போரதீவுப்ற்று பிரதேசத்திற்குரிய 2018 பெரும்போக மானாவரி மற்றும் சிறிய நீhபாசன செய்கைக்கான ஆரம்பக்கூட்டம்

 (படுவான் எஸ்.நவா)

மட்டு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேச 2018 பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக்கூட்டம் வெல்லாவெளி பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) ஆம் திகதி நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறிய நீர்பாசனம் மானாவரிக் கண்டங்களின் பயிர்செய்கைக்குரிய நீர்பாசனம் விதைக்கப்படும் நெவ்லினங்கள் மற்றும் கால்நடைகளை வெளியேற்றுதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
இப்போது வெல்லாவெளி கமநல சேவைகள் நிலையம் 1669 ஏக்கரும் பழுகாமம் கமநல சேவைகள் நிலையம் 2828 ஏக்கரும் மண்டுர் கமநல சேவைகள் நிலையம 643 ஏக்கரும் மொத்தமாக 5140 ஏக்கர் செய்வதற்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
விதைக்கப்படும் நெல்லினங்கள் 03மாதம் இனம் வீஜீ.300 ஏரீ.307 ஏரீ.308 ஏரீ.3033 ½ மாதம் வீஜீ 94ஃ1. வீஜீ 357. வீஜீ 358சம்பா .வீஜீ 360கீரிச்சம்பா போன்ற நெல்லினங்கள் ஆகும்
இவ்வருடம் பெரும்போக மானாவரி விவசாய வேலைகள் 15.09.2018ம் திகதி ஆரம்பமாவதாகவும் விதைப்புவேலைகள் 10.10.2018ம் திகதி தொடக்கம் 10.11.2018ம் திகதி வரையும் காப்புறுதி செய்யும் இறுதிதிகதி 10.11.2018திகதி  வரையும் கால்நடை அகற்றும் திகதி 15.09.2018 இடம்பெறுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது கமநல வங்கிகள் மற்றும் அரச வங்கிகளும் இவ்வருடம் இப்போகத்திற்கு கடன் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் ஆர் ராகுலநாயகி விவசாய கமநல சேவைகள் மற்றும் நீர்பாசனத்திற்கான அதிகாரிகள் கால்நடை வைத்திய அதிகாரிகள் வனஜீவராசிகள் அதிகாரிகள் வங்கி முகாமையாளர்கள் பொலிஸ் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.