மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் முக்கியத்துவமான நகரமாகவும் மிகவும் நெருக்கமான நகரமாகவும் மாற்றம்பெற்றுவரும் செங்கலடி நகரை அபிவிருத்திசெய்யும் விசேட கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பி.புண்ணியமூர்த்தி, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர்,செயலாளர், செங்கலடி நகர வர்த்தக சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செங்கலடி நகரில் மிகவும் பழமையான பொதுச்சந்தை மிகவும்மோசமான உள்ளமை தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் தேசிய அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கொண்டுசென்றதையடுத்து குறித்த சந்தையினை நவீன வசதிகளுடன் அமைப்பதற்கு இரண்டு கோடி ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த சந்தை தொகுதியை அமைப்பது தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டதுடன் செங்கலடி நகரில் பஸ் நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன் செங்கலடி நகர்ப்பகுதியில் எதிர்நோக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டதுடன் செங்கலடி நகரினை அபிவிருத்திசெய்யும் வகையில் நகரத்தில் மேற்கொள்ளப்பட தேவையான திட்டங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேசசபைக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.
நகரில் பல வியாபார நிலையங்கள் பொதுச்சந்தை என்பன உள்ளபோதிலும் குடிநீரை பெறுவதிலும் இயற்கை கடன்களை மேற்கொள்வதற்கும் நகருக்கு வருவோர் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அவற்றினை நிவர்த்திசெய்வது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.