உயர்ந்த உள்ளம் கொண்ட புலம்பெயர் தமிழன்

மட்டக்களப்பு பகுதியில் உள்ள வறிய நிலையில் உள்ள மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.

புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வதியும் உறவினால் இந்த உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு,கல்லடி வேலூர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லடி வேலூர் கிராம சேவையாளர் எஸ்.பாக்கியநேசனின் முயற்சியின் பயனாக இந்த பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன் வறிய நிலையில் உள்ள ஒருவருக்கு வாழ்வாதார உதவியும் வழங்கப்பட்டது.

புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வதியும் லோகிதாஸ் பிரதீஷ் என்பவர் தனது மகனான பிரதீஷ் பிரணவ்வின் 11வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இந்த உதவிகளை வழங்கிவைத்தார்.

வருடாந்தம் பல்வேறு உதவிகளை சுவிஸ் நாட்டில் வதியும் லோகிதாஸ் பிரதீஷ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி வருகின்றார்.

இதன்கீழ் இம்முறை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள வறிய மாணவர்களுக்கு இந்த உதவியினை வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்வில் லோகிதாஸ் பிரதீஷ் மற்றும் அவரது குடும்ப உறவினர்களும் பகுதி சமுர்த்தி உத்தியோகத்தர்,கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் சுபராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த மாணவர்களில் சாதார தர பரீட்சையில் இந்த வருடம் மாவட்ட மட்டத்தில் சாதனை படைக்கும் மாணவருக்கு தான் 10 இலட்சம் ரூபாவினை அவரது கல்வி செலவுக்கு வழங்கவுள்ளதாக லோகிதாஸ் பிரதீஷ் இங்கு தெரிவித்தார்.