கருவப்பங்கேணி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் பொலிசாரினால் கைது

 


(லியோன்)

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  மட்டக்களப்பு  கருவப்பங்கேணி பகுதியில்  கசிப்பை தயாரித்து  நீண்டகாலமாக  விற்பனை  வந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தும் கோடா மற்றும் உபரணங்கள் மீட்டுள்ளதாக  மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்


மட்டக்களப்பு பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய  ஊழல் ஒழிப்பு பொலிஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் எஸ் .பிரபாகரன் வழிகாட்டலில் பொலிஸ் புலனாய்வு  குழுவினர்  நேற்று மாலை கருவப்பங்கேணி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  குறித்த பகுதியில் வீடு ஒன்றில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடா மற்றும் கசிப்பு கைபற்றப்பட்டத்தாக பொலிசார் தெரிவித்தனர் .

இதன்போது கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 45  லீட்டர்  கோடா ,6.750  லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான  உபகரணங்கள் கைபற்றப்பற்றுள்ளதுடன்  கசிப்பு  விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர் .

நீண்டகாலமாக கசிப்பை உற்பத்தி செய்து மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் கசிப்பு விற்பனை  நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

 இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பு நீதவான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்