எங்களுடைய இனத்தை எங்களுடைய தமிழ் சமுகத்தை நாங்கள் சரியான முறையில் அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும். என கூறினார் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன்.




(விளாவூர் நிருபர்)

நேற்று (13.08.2018) கொந்தியாபுலை ஸ்ரீ கிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் இவ்வாறு தனது உரையினை ஆற்றினார்

இளைஞர்கள் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர வேண்டிய மாற்று சக்திகள் நீங்கள் ஆகவே அந்த அடிப்படையிர் இந்த நாட்டிலே கடந்தகால யுத்தம்  பல இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராடினார்கள் ஒரே நோக்கம் எங்களுடைய நிலத்தையும் வளத்தையும் பாதுகாக்க வேண்டும் ஒரு இனத்தினுடைய நிலமும் வளமும் பாதுகாக்கப்படும் பொளுதுதான் அந்த இனம் அந்த நிலத்தில் தலைநிமிர்ந்து வாள முடியும். எந்த இனம் தன்னுடைய நிலத்தை வளத்தை பறிகொடுக்கின்றதோ அந்த இனம் அந்த நாட்டுக்குள்ளே ஒரு அடிமைப்படுத்தப்பட்ட இனமாக மாற்றமடையும்.

மட்டக்களப்பு மாவட்டம் என்பது மிகப்பெரிய நிலப்பரப்பை கூடிய மாவட்டமாகும் ஆகவே இந்த மாவட்டத்திற்குரிய நிலத்தையும் வளத்தையும் பாதுகாப்பதிலே மிக கவனமான முறையிலே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்திருக்கின்றோம். ஆகவே எங்களுடைய இனத்தை எங்களுடைய தமிழ் சமுகத்தை நாங்கள் இப்போது இருக்கின்ற தலைமுறை அடுத்த தலைமுறைக்கு சரியான முறையிலே கையளிக்க வேண்டும்.
ஒரு இனத்தினுடைய இருப்பு என்பது நான்கு தூன்களிலே இருக்கும் கூடாரம் போன்றது. முதலாவது தூண் நிலம் நிலம் என்பது மிக முக்கியமானது நிலம் சார்ந்த இருப்பு முக்கியம்.
கொழும்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலக நிலப்பரப்பினுடைய இரண்டு மடங்குதான் அறுநூற்றி தொண்நூற்று ஒன்பது சதுர கிலோமீற்றர் கொண்டதுதான் கொழம்பு மாவட்டம் ஆகவே இரண்டாயிரத்து அறுநூற்று நாற்பது சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை கொண்டது மட்டக்களப்பு மாவட்டம் இந்த மாவட்டத்தினுடைய நிலம் என்பது கொழம்பு மாவட்டத்திடம் ஒப்பிடும் பொளுது ஐந்து மடங்கு நிலப்பரப்பை கொண்ட மிகப்பெரிய மாவட்டம்.

ஆகவே இந்த மாவட்டத்தினுடைய நிலம் என்பது மிக முக்கியமானது நிலம் சார்ந்த வளம் அது முதலாவது தூன் இரண்டாவது தூன் எங்களுடைய மொழி நாங்கள் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை இப்பொளுது செய்து வருகின்றோம் "தமிழருக்காக நாம் தமிழராய் நாம்" என்ற அடிப்படையிலே விசேட செயர்திட்டங்கள் இது இரண்டாவது தூண் மூன்றாவது எங்களுடைய கல்வி விளையாட்டு கலாசாரம் பண்பாட்டு விழமியங்கள் அது பாதுகாக்கப்படவேனும்.இவை மூன்றாவது தூணாக இருக்கின்றது நான்காவது தூணாக இருப்பது எங்களுடைய பொருளாதாரம் பொருளாதாரத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.
ஆகவே நிலம் ,மொழி, எங்களுடைய கல்வி பண்பாடு விளையாட்டுத்துறை சார்ந்த விழமியங்கள் அத்தோடு நான்காவது பொருளாதாரம் இந்த நான்கிலும் எங்களுடைய சமுகம் வளர்ச்சியடையும் என்று சொன்னால் இந்த நான்கையும் பாதுகாப்பதில் எங்களுடைய சமுகம் சரியான முறையில் செயற்படும் என்று சொன்னால் நாங்களும் இந்த நாட்டிலே அனைத்து இனங்களுக்கும் சமமாக தலைநிமிர்ந்து இருக்க முடியும்.
இளைஞர்களுடைய பங்களிப்பு மிக முக்கியமானது அந்த பங்களிப்பு மிகப்பெரிய காத்திர பூர்வமானது நாம் அனைபேரும் முற்போக்கு தமிழர்களாக தமிழால் ஒன்றுபட வேண்டும் என தெரிவித்தார்.