யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மட்டக்களப்பு மாநகரசபைக்கு இன்றைய தினம் (10) விஜயம் மேற்கொண்டதுடன் மாநகரசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடலும் மேற்கொண்டிருந்தார்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள், அமைவுகள், மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், யாழ் மாநகரசைபயின் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.