செல்வநாயகம் வீதி, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நிருவாகசபைத்தெரிவில் குழப்பம்,

மட்டக்களப்பு மட்/ செல்வநாயகம் வீதி,
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நிருவாகசபைத்தெரிவில் குழப்பம்,   நீதிகோரும் மக்கள்



மட்/ செல்வநாயகம் வீதி, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் 12.08.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பொதுமக்கள், மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகஸ்தர் மற்றும் ஞானசூரியம் சதுர்க்கம் கிராமசேவை உத்தியோகஸ்தர் முன்னிலையில்
புதிய நிர்வாக சபை தெரிவின் போது பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.

இருவருக்கிடையில் தலைவருக்கான போட்டி இடம்பெற்றபோதே வாக்குவாதங்களும் தகாத வார்த்தைப்பரயோகங்களும் ஏற்பட்டுள்ளது.

ஆலயம் தூய்மையான இடம் என்றும் பாராமல் பொதுமக்கள் நிறைந்த இடத்தில் பொருத்தமற்ற வார்தை பிரயோகம் மேற்கொண்டதுடன் தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ள எத்தனிக்கப்பட்ட போது, குறிப்பிட்ட சம்பவம் காரணமாக  தலைவர் பதவிக்கு போட்டியிட்ட  நபருக்கு அதி கூடிய குருதி அழுத்தம் காரணமாகவும் மயக்கநிலை ஏற்பட்டதன் காரணமாகவும் ஆலயத்தின் பொதுக் கூட்டம் கூடிய இடத்தில் இருந்து அகல வேண்டிய நிலை ஏற்பட்டது.

தவறான வார்த்தை பிரயோகம் காரணமாக கூட்டத்துக்கு பங்குபற்ற வந்த அதிகளவான பெண்கள் வெளியேறிச் சென்றனர்.

இதன் போது தற்காலிக செயலாளராக கடமையாற்றிய  அன்பர் எதிர் தரப்பினருக்கு பக்க சார்பாக தனது கடமையினை ஆற்றிக் கொண்டு,  இவ்  பதட்டமான சூழலில் நிர்வாக சபை தேர்வும்  நடைபெற்றது.

இவ் குழப்பகரமான நிகழ்வை பொதுமக்கள் கண்டிக்க கூடிய தன்மை இருந்தது.

ஆலயத்தில் புனிதம் பேண வேண்டியவர்களே இவ்வாறு நடந்துகொண்டதையிட்டு அனைவரும் கவலை கொண்டதுடன் வன்மையாகவும் கண்டித்தனர்.

மேலும் அதிகளவான தேர்வான அங்கத்தவர்களும் இன் நிகழ்வினையிட்டு கவலை கொண்டதுடன்,
அவர்களும் பொதுமக்களும் ,மண்முனை வடக்கு பிரதேச செயலாளரிடமும், மாவட்ட செயலாளரிடமும், மேற்படி நிர்வாக தேர்வினை இடை நிறுத்தி, பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளரின் பிரதிநிதி முன்னிலையில் ஆலயத்தின் பொதுக்கூட்டத்தினை அமைதியான முறையில் மீளவும் நடாத்தி பொதுமக்கள் விரும்பும் நல்லதொரு நிர்வாக சபையை தேர்தெடுத்து ஆலயத்தையும் அதனை சூழவுள்ள பிரதேசத்தையும் நிர்வகிக்க உதவுமாறும் கேட்டு கொள்கின்றனர்.

அத்தோடு எதிர்காலத்திலும் இவ்வாறான நிகழ்வு நடைபெறாமல் அமைதியான ஒன்று கூடல்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்தி தரும்படியும் கேட்டுக் கொள்கின்றனர்.