கொத்தியாபுலை ஸ்ரீகிருஸ்ணா வி. கழகம் நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரசத்திற்குற்பட்ட கொத்தியாபுலை ஸ்ரீகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் தனது 23வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் கிராமத்தில் உயிர் நீர்த்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை 11ம்,12ம்,13ம் ஆகிய திகதிகளில் ஸ்ரீகிருஸ்ணா விளையாட்டு மைதானத்தில் நடாத்தி இருந்தார்கள்.
இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு 42அணிகள் பங்குபற்றியிருந்தன

இறுதிப் போட்டிக்கு மண்முனை மேற்கு பிரதேசத்தில் இருந்து விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகமும்
நடராஜானந்தபுரம் சக்தி விநாயகர் விளையாட்டுக் கழகமும் தெரிவாகியிருந்தன.

இந்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில்
முதலாம் இடத்தினை
நடராஜானந்தபுரம் சக்தி விநாயகர் விளையாட்டுக் கழகமும்,

இரண்டாம் இடத்தினை
விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகமும்,

மூன்றாம் இடத்தினை
காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக் கழகமும்,

நான்காம் இடத்தினை
களுமுத்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகமும்
பெற்றுக் கொன்டது.

இறுதி நிகழ்விற்கு அதிதிகளாக
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன்,
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியச்சகர்,
மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா,
உப தவிசாளர் பொ.செல்லத்துரை,
கொத்தியாபுலை சமுகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.