சட்டம் மற்றும் உளவளத் துறையும் ,தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு


(லியோன்)

சட்டம் மற்றும் உளவளத் துறையும் ,தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது மட்டக்களப்பு மண்முனை வடக்கு சமூர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின்  ஏற்பாட்டில்   பிரதேச செயலாளர்  கே .குணநாதன் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது


நடைபெற்ற சட்டம் மற்றும் உளவளத் துறையும் ,தொழில் வழிகாட்டல் கருத்தரங்கில்  நீதி மன்றங்களின் முக்கியத்துவம் , ஒரு ஜனநாயக நாட்டில் அதிகாரங்களைக் கொண்டு  நடுநிலைமைத்தன்மை, சட்ட அதிகாரங்களைக் கொண்ட நிறுவனங்களாக  நீதிமன்றங்கள் . இந்த நீதிமன்றத்தின் நீயாயதிக்கமானது தண்டனைச் சட்டக் கோவையினாலும் மற்றும் வேறு சட்டங்களாலும் ஏற்பாடு செய்யப்பட பல கடுமை குறைந்த குற்றவியல் குற்றங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கருத்தரங்காக இடம்பெற்றது .

இந்த கருத்தரங்கில் வளவாளராக சட்டத்தரணி திருமதி . சசிரூபன் மற்றும் நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி நிர்மளா கிரிதரன் ,சமுர்த்தி தலைமையாக முகாமையாளர் திருமதி .செல்வி வாமதேவம் , பெண்கள் அபிவிருத்தி ஒன்றிய அங்கத்தவர்கள் , பிரதேச அபிவிருத்தி அமைப்பின் அங்கத்தவர்கள் ,சமுர்த்தி சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,   கலந்துகொண்டனர்












 ,